Thursday, March 31, 2005

முதலிரவு

முதலிரவு என்றதால்
நெஞ்சில் படபடப்பு;
கொஞ்சம் பரபரப்பு.

எத்தனையோ பாதிநாட்களை
படுக்கையில் கழித்த எனக்கு,
அன்று ஏனோ
அரை அவுன்ஸ் ஏக்கம்
மனதில் மகுடி வாசித்தது.

விளக்கணைத்து -இருளின்
விரல் பிடித்து ஏதோ
போருக்கு போவது போல
போர்வைக்குள் போனேன்.

சாய்ந்த மாத்திரத்திலேயே
காதுக்குள் அவள் சொன்ன
சிருங்கார மொழியும்
சிக்கன சிணுங்கலும்
புரியாமல் தலையசைத்தேன்.

ஓயாத அவள் பசிக்கு
ஓவ்வாத ஜென்மமாக
சுருண்டு விட்டேன்.

ஆனால்,
அவளோ விடவில்லை.

போர்வைக்குள் நீச்சலடித்தேன்;
கைகளோ படபடத்தன;
கால்களோ துடிதுடித்தன;
என் கை நகங்களே
என்னை பிராண்டின.

முடிந்தளவு போராட்டம்
விடிய விடிய நடந்தது.

போரின் உச்சத்தில்
போர்வையே கிழிந்தும்விட்டது.

காலையில் பார்த்தபோது
ஓரத்தில் சிறு ரத்தக்கறை.

என்னவிரசமான வர்ணனையா?

வெளிநாடொன்றில்,
நான் கழித்த முதலிரவில்,
எனையழித்த நுளம்பின் தொல்லையை
இதற்கு மேல் எப்படி சொல்ல?

7 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

எழுதிக்கொள்வது: aaruuran

அற்புதம்

9.36 7.4.2005

Anonymous said...

ARUNAN

பின்னூட்டத்துக்கு நன்றி ஆரூரன்.தொடர்ந்து வாசியுங்கள்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: ram

nanri

14.37 7.4.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: ram

எழுதிக்கொள்வது: ram

எழுதிக்கொள்வது: ram

nanri

14.37 7.4.2005

14.37 7.4.2005

14.37 7.4.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: ram

எழுதிக்கொள்வது: ram

எழுதிக்கொள்வது: ram ninga


எழுதிக்கொள்வது: ram

nanri

14.37 7.4.2005

14.37 7.4.2005

14.37 7.4.2005

14.37 7.4.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: Lingan

யாழ்ப்பாணத்தில இல்லாத நுளம்பா உங்களை வெளிநாடொன்றில் கடித்தது. என்ன ஒரு புலுடா. ஆருக்குக் கதைவிடுறியள். பயப்பிடாம உண்மையைச் செல்லுங்கோ.

20.47 7.4.2005