அமைதிப்படை எண்ட பேரில வந்து எங்கட ஊர்மனையளுக்குள்ள இந்தியன் ஆமி செய்திட்டுப்போன ஆக்கிரமங்கள் சொல்லி மாளாது.
பொம்பிளையள கெடுத்ததும் ஆக்களப்பிடிச்சுக்கொண்டுபொய் அடிச்சதும் சுட்டதும் சனத்தை நிம்மதியா நித்திர கொள்ளவிடயில்ல.
அந்தப்புண்ணியவானுகளிண்ட அட்டூழியங்களில உதாரணத்துக்கு ஒண்டைச்சொல்லவேணுமெண்டா பள்ளிக்குடத்தில படிக்கிற பெடியன் ஒருத்தனப்பிடிச்சக்கொண்டு போய் சித்திரவதை செய்து மலவாசலால கொக்கோ கோல போத்தில உள்ளுக்கு இறுக்கிப்போட்டாங்கள்.பிறகு பள்ளிக்கூட பிறின்ஸிப்பள் கோரிக்கை விடுத்ததால பெடியன அப்பிடியே சோதின எழுத விட்டிருக்கிறாங்கள்.சோதினை மண்டபத்தில மயங்கி விழுந்த பெடியன ஆஸ்பத்திரிக்குக்கொண்டுபோய் எக்ஸ் ரே எடுத்துப்பாக்கேக்கதான் உள்ளுக்க போத்தில் கிடந்தது தெரியவந்தது.
நாறல் சப்பாத்திய காம்ப்வளிய இருந்து திண்டு திண்டு தினவெடுத்துப்போய் செய்த அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமில்ல.இப்ப ஈராக் சனம்போல அப்ப நாங்கள் எண்டு சொல்லலாம்.
கண்டநிண்ட இடங்களில ட்ரக்க நிப்பாட்டிப்போட்டு அதில நிண்டு செக்கிங் எண்ட பெயரில அதால போற வாற ஆக்கள இறக்கி ஏத்திறது அவயிண்ட பேமஸ் விளையாட்டு.அதில பெரிய பகிடி என்னெண்டா கேள்வி கேக்கிற அளவுக்கு அவயளுக்கு இங்கிலீஷ் தெரியாது பதில் சொல்லுற அளவுக்கு எங்கட ஆக்களுக்கு இங்கிலீஷ் தெரியாது.
ஒருக்கா ஆனைக்கோட்டைச்சந்தியில செக்கிங் நடக்கேக்க ஒரு ஆமி கேட்ட கேள்விக்கு விளக்கமா இங்கிலீஷில கதைச்ச இங்கிலீஷ் மாஸ்டரையே கனக்க கதைக்கிறார் எண்டு சந்தேகத்தில பிடிச்சுப்போட்டாங்கள்.
வீடுகளில பூந்து அங்க இருக்கிற கோழியலப்பிடிச்சுக்கொண்டு போறது அவயளிண்ட முக்கிய ‘வேலை’யாக அப்ப இருந்தது.
இப்பிடித்தான் தின்னவேலி பாம் ஸகூலுக்கு போய் அங்க கோழி பிடிக்கிறதுக்கு அனுமதி கேட்டிருக்கினம்.அங்க இருந்த அதிகாரியளும் பயத்தில ‘ஓம் ஓம் பிடியுங்கோ’ எண்டு விட்டிட்டினம்.கோழியல் கொஞ்சத்தை பிடிச்சுப்போட்டு பிறகும் ‘ஹென் ஹென்’ எண்டு அவயளிட்ட கேட்டிருக்கிறாங்கள். அங்க இருந்தாக்களும் என்னடாப்பா இவ்வளத்தையும் பிடிச்சுப்போட்டு திருப்பவும் ஹென் ஹென் எண்டிறான் எண்டுட்டு திரும்பவும் கோழிக்கூட்டக்காட்டிருக்கினம்.அதுக்கு அவன் ‘நோ நோ ஹென்’ஸ் ஹஸ்பண்ட்’எண்டிருக்கிறாங்கள்.அவயளுக்கும் ஒண்டும் விளங்காம முளிக்க அதால ஒரு சேவல் ஓட ‘தற் தற்’ எண்டு கத்த, அப்பதான் தெரிஞ்சுது இவன் சேவலைத்தான் “ஹென்’ஸ் ஹஸ்பண்ட்” எண்டவனெண்டு.
அவயிண்ட இங்கிலீஷ் கதையில எனக்கு இன்னும் மறக்கேலாத சம்பவம் இதுதான்.
0 comments:
Post a Comment