Wednesday, April 06, 2005

மிரண்டார் விஜய்!

கில்லி படவெற்றியை அடுத்து இலங்கைக்கு முதன்முதலாக வந்திருந்தார் விஜய்.தன் குடும்பத்துடன் ஹொலிடே இன் ஹொட்டேலில் சில நாட்கள் தங்கியிருந்து அவருக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட சில நிகழ்வுகளில் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தித்து மகிழ்ந்தார்.

ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் பத்திரிகையாளர் சந்திப்பும் ஒன்று.அது ஹொலிடே இன் ஹொட்டேலிலேயே இன்னொரு தளத்தில் நடைபெற்றது.

வரவழைக்கப்பட்ட சுமார் 25 பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்திப்பு ஆரம்பமாகி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விஜய் முன்னே நின்று பதிலளித்துக்கொண்டிருந்தார்.

அப்பாது ஒரு பத்தரிகையாளர் மைக்கை வாங்கி-

'வணக்கம் விஜய் அவர்களே! இலங்கை எப்படியிருந்தாலும் உங்களுக்கு மாமியார் வீடுதான்.அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்" என்றார்.

அந்தக்கேள்வியைக் கேட்டதும் விஜயின் முகத்தில் ஈ ஆடவில்லை.திகைத்துப்போய் நின்றார்.என்ன நடந்தது என்று எவருக்கும் புரியவில்லை.உடனே விஜய் குனிந்து அருகிலிருந்து விழா ஏற்பாட்டாளருடன் ஏதோ கேட்டார்.அதன்பிறகுதான் அவரது முகத்தில் மீண்டும் பழைய களை வந்தது.

மனையின் தாய் வீட்டை இலங்கையில் மாமி என்று அழைப்பது வழக்கம்.விஜயின் மனைவி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் விஜயிற்கு இலங்கை மாமியார் வீடு என்ற அர்த்தத்தில் பத்திரிகையாளர் கேள்வியை கேட்டிருந்தார்.ஆனால் தமிழ்நாட்டில் பொலீஸ் ஸ்டேஷனைத்தான் மாமியார் வீடு என்று கூறுவது வழக்கம்.

இந்த அர்த்த முரண்பாடு புரியாமல் மிரண்டுபோன விஜய் விடயத்தை விளக்கமாகக் கூறியபின்னர்,

“என்ன சார் இப்படி பயப்பிடுத்தி விட்டுட்டீங்க.” என்றார் அப்பாவியாக.

7 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: kavi

ஓ மாமியார் வீடு = பொலிஸ்ரேசன்

0.1 7.4.2005

Anonymous said...

மாமியார் வீடு = போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன் = பொலிஸ்ரெசன்

Anonymous said...

மாமியார் வீடு = போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன் = பொலிஸ்ரெசன்

kirukan said...

In TamilNadu also, MaamiyarVeedu is the quite often used word..

They refer to PoliceStation only in movies... or just for fun..

arunan said...

We also heard that word thru merely movies.We thoght that is colokial language in tamilnadu.HOwever,Thanks for Kirukkan to feedback.Welcome.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Lingan

சத்தியமாய்ச் சொல்லுறன் இந்தக் குசும்பு வேலை உங்கடையாத்தான் இருக்கும்

13.35 7.4.2005

அருணன் said...

என்ன லிங்கன் என்ன விடமாட்டியள் போல கிடக்கு.சத்தியமா நானில்ல.அது வேறொரு பத்தரிகையாளர்.பின்னூட்டத்துக்கு நன்றி.