சின்னவயசில பாகைமானி,வட்டாரி,15 சென்டிமீட்டர் அடிமட்டம்,முக்கோணம் எல்லாமுள்ள கொம்பாஸ் என்றால் அது ஏதோ அண்டப்பிரகண்டம் மாதிரி.அப்பாவிட்ட காசு கேக்கச்சொல்லி எந்தநேரமும் அம்மாவப்போட்டு நச்சரித்து வாங்கிறதுதான் அப்ப எங்கட பெரியசாதனை. ஏக்கனவே வேண்டித்தந்த கொம்பாஸை துலைக்கிறது அல்லது போட்டுநெளிச்சுப்போடிறது.பிறகு புதுசுக்கு வழம் பண்ணிறது.
வகுப்பில மற்றப்பெடியள் சிலபேர் கேம்பிரிட்ஜ்,ஓக்ஸ்போர்ட் எண்டு அப்பவே 150 ரூபா விலையான கொம்பாஸெல்லாம் கொண்டுவருவாங்கள்.சிலபேர் வெளிநாட்டால மாமா கொண்டு வந்தவர் சித்தப்பா அனுப்பினவர் எண்டு பிளாஸ்டிக் பெட்டியில புதுரகமான சமானெல்லாம் கொண்டுவருவாங்கள்.அவங்கள் கொண்டு வந்தாச்சரி.விடிய ஸ்கூலுக்கு போய் பிறேயருக்கு மணி அடிக்கிறவரைக்கும் அந்தக்கொம்பாஸ் பெட்டி கொண்டுவந்தவனைச்சுத்திநிண்டு கதைக்கிறது.அவன் அது எப்பிடி வந்தது என்ன விலைவரும் எண்டெல்லாம் போட்டுத்தாக்குவான். சுத்திவர நாங்கள் நிண்டு இலையான் பூராதகுறையா வாயைப்பிளந்துகொண்டு நிண்டு கதைகேக்கிறது.
எனக்குத்தெரியும் வீட்ட கேட்டாலும் அப்படியான கொம்பாஸ் கிடைக்கப்போறேல்ல.அதிலும் பாக்க கிடைக்கிறதக்கேப்பம் எண்டுடுட்டுத்தான் நடராஜ் கொம்பாஸ{க்கு மனுப்போடுறது.அது இந்தியாவில இருந்து செய்துவாற சாமான்.என்ன அப்ப ஒரு 40 ரூபா வரும்.அத எப்பிடியாவது அம்மாவுக்குள்ளால அப்பாவுக்கு பிறசரக்குடுத்து வாங்கிப்போடுறது.
வாங்கினா பிறகென்ன.ஏதோ வானத்தில மிதக்கிற சந்தோஷம்.ரெண்டு மூண்டு நாளுக்கு இரவில கூட நேரமிருந்து படிப்பன்.விடிய எழும்பின உடன என்ர மேசயப்பொய் பாக்கிறது அதில கொம்பாஸ பாத்ததும் ஒரு சந்தோசம்.ரெண்டு மூண்டு நாளுக்கு ஸ்கூல் Bag ஐ கீழே போடுறதும் இல்ல.உள்ளுக்க கொம்பாஸ் இருக்கிறதால பூப்புபோல வைக்கிறது.
அந்தக்கொம்பாஸில இருக்கிற 15 சென்டி மீட்டர் அடிமட்டம்.ஒருக்கா கீழ விழுந்தாலும் அதுண்ட ஆயுளுக்கு உத்தரவாதம் இல்ல.40 ரூபா சாமான்தானே விலக்கேத்த மாதிரி சாமான்.அப்ப புதுகொம்பாஸில இருக்கிற அடிமட்டம் அப்பிடி இப்பிடி உடைஞ்சுதோ…..சரி.
பிறகென்ன அம்மாவுக்கு திருப்பவும் நச்சரிப்பு.
9 comments:
எழுதிக்கொள்வது: kavi
அது இந்தியாவில இருந்து செய்துவாற சாமான்.என்ன அப்ப ஒரு 40 ரூபா வரும்.அத எப்பிடியாவது அம்மாவுக்குள்ளால அப்பாவுக்கு பிறசரக்குடுத்து வாங்கிப்போடுறது.
17.8 7.4.2005
எழுதிக்கொள்வது: Devanantha
உங்கள் கட்டுரையை படித்ததும் சின்ன வயதுக்கு ஒருதரம் போய் வந்தமாதிரி இருந்தது. நன்றி
தேவானந்தா
8.25 7.4.2005
நடராஜா கொம்பாஸ் எண்டா என்ன இளப்பாரமே. அதுவும் ரெனோல்ட் பேனயும் தான் ஏழைகளின் தோழன். ஏழைகளுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் தான். ஒக்ஸ்போட் போல பெரிய கொம்பாஸ் வேண்டித் தந்துபோட்டு அதுக்காகவே கூட மாக்ஸ் எடுக்கோணுமெண்டு நச்சரிக்கப்படுறதவிட நடராஜாவே மேல். என்ன லேசாக் கறள்பிடிக்கும். எங்கயேன் நசிஞ்நு நெளிஞ்சாலும் ஒரு மாதிரி நெளிவெடுத்துச் சரிக்கட்டிப்போடலாம். ஆனா பிளாஸ்டிக் கொம்பாஸ் காரனிண்ட பாடு அம்போதான்.
இப்ப நல்ல ஒரு போர்ம் இல இருக்கிறீங்கள். தொடர்ந்து எழுதுங்கோ.
எழுதிக்கொள்வது: Lingan
நல்ல காலம் அப்ப உங்கட அப்பா புத்திசாலித்தனமாக ஒக்ஸ்போட் கொம்பாசுக்கு காசு செலவளிக்கேல்ல. அப்ப செலவளிச்சிருந்தாரெண்டால் இப்ப அந்த மனுசன் அப்போ செய்த வீண் செலவை நினைச்சு அப்ப வீணாகக் கவலைப்பட்டு வருத்தத்தைத் தேடியிருக்கும். உண்மையிலேயே அந்த மனுசன் தீர்க்கதரிசிதான். நடராஜ் கொம்பாஸ் வாங்கித்தந்த நன்றிக்கடனுக்காகவாவது ஒழுங்காப் படிச்சிருக்கலாமே. வீண்செலவு வச்சதுதான் மிச்சம்.
20.39 7.4.2005
அட நான் தான் பழைய கள் அடிக்கிறனெண்டா இங்க பலபேர் ஊர் ஞாபகத்தில இருக்கினம்போல கிடக்கு.இருக்காதா பின்ன.பெற்றதாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே எண்டு சும்மாவே பாடினவயள்.
வசந்தன் கூறியுள்ள அந்த நடராஜ் கொம்பாஸிக்குரிய அந்த தனிச்சிறப்புக்களை எண்ணும்போது அந்தக்கால ஞாபகங்கள் மேலும் அலைமோதுது.லிங்கனும் விடுறதா இல்லப்போல.
இந்தக்கொம்பாஸை வாயால கடித்து திறக்கிறதில இருக்கிற சுகமே தனி.லிங்குசாமி ஜி படத்தில த்ரிஷா வாயில கொம்பாஸைக்கடிக்க கொடுத்து திறக்க வைக்கிற காட்சி எங்களுக்கு ஊர் ஞாபகத்தையும் சேர்த்துக்கிளறிவிட்டுட்டுது.
தேவாநந்தா,கவி ஊட்டங்களுக்கு நன்றி தொடர்ந்து வாசியுங்கள்.ஓசை ஒலிக்கும்.
எழுதிக்கொள்வது: Anurjan
சுப்பர் மச்சான் சுப்பர்
சரியான சந்தோசம்.
ஒரு விசயம் கூட கழிக்க முடியாது.
சொல்லப்போனா எலக்கிரி
17.45 9.4.2005
எழுதிக்கொள்வது: ahthy
டெய் நல்லாயிருக்கடா முதலிரவு கவிதை சுப்பர்
10.26 10.4.2005
ஊட்டங்களை வழங்கிய அருமை நண்பர்கள் அனுர்ஜன்,ஆதி ஆகியோருக்கு நன்றி.
எழுதிக்கொள்வது: சாந்தி ரமேஷ் வவுனியன்
நடரஜா கொம்பாசை சயக்கிள் கரியரில கொழுவிப்போட்டு விழவைச்சு கொம்பாசுமில்லை அடிமட்டமும் இல்லை றெனோல்ட் பேனையும் அந்த மை நிரப்புற மைப்பேனையையும் உடைச்சு அடிவாங்கினது சேரனி் ஞாபகம் வருதே நிலமையிலை ஞாபகம் வருது. மண்வாசம் தருகின்ற அருணனே பழைய கள்ளைத்தன் முந்தியும் அடிச்சனீங்களோ ?
அன்புடன்
சாந்தி ரமேஷ் வவுனியன்
21.4.2005 அன்று 21.49 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
Post a Comment