அப்பாடா…..!
மகள் ஆசைப்பட்ட மாதிரி செவ்வாயிற்கு கூட்டிக்கொண்டுபோய்வந்தாச்சு.ஏதோ பெரிய பொறுப்பு முடிஞ்ச மாதிரிக்கிடக்குது.தன்ர வகுப்பு சிநேகிதிமார்; எல்லாரும் போனமுற விடுதலைக்கு செவ்வாய் கிரகத்துக்கு போய்ட்டு வந்தவையாளாம்.தன்னக்கூட்டிக்கொண்டு போகேல்லையாம் எண்டு ரெண்டு மாதமா ஒரே நச்சரிப்பு.ஒருமாதிரி அமெரிக்காவில இருக்கிற மச்சான்காரனிட்டச்சொல்லி ரொக்கெட்டுக்கு புக் பண்ணி குடும்பத்தோட போட்டு வந்தாச்சு.
அங்க போறதெண்டா சும்மாவே என்ர மனுசிக்காரியிண்ட சொந்தக்காரர் அங்கதான் இருக்கினம்.அவயளுக்கு அது இது சும்மா சின்ன சாமாங்களைத்தான் இந்தமுறை வேண்டிக்கொண்டு போனனாங்கள்.அதுக்கு மகளே தன்ர பொக்கற் மணியா வச்சிருந்த 6000 டொலரைத் தந்தவ.
குடும்பமெண்டு வந்திட்டா பொறுப்பும் வேலையளும் கூடவே சேந்தெல்லே வந்திடுது.
இனி நாளைக்கு சின்னவரை எய்ட்ஸ் நோய்த்தடுப்பூசி போட கூட்டிக்கொண்டு போகவேணும்.கடைசியா எடுத்த கணக்கெடுப்பின்படி நூறு பேரில 60 பேருக்கு எய்ட்ஸ் இருக்காமெண்டா தெரியாதே எல்லாரும் கவனமா இருக்கவேணும்.அதோட இவர் க்ளோனிங்கில பிறந்ததால நாங்கள் கொஞ்சம் ஆளில கூடக்கவனம்.
நான் இப்பிடி வேலையளெண்டு ஓடித்திரியவே நேரம் சரி.ஆனா என்ர செல்ல மகளிருக்கிறா.அவவிண்ட லைவ் ஸ்டைல் வித்தியாசம்.அவவுக்கு இந்தப்பழைய காலத்து பாட்டுகளெண்டா காணும்.வீட்டில பெரிய சத்தமா போட்டிட்டு கேட்டு ரசிக்கிறதுதான் அவவிண்ட வேலை.என்னெண்டு தெரியேல்ல.அவளுக்கு இந்த ஏ.ஆர்.ரகுமான்,வித்யாசாகர்,யுவன் சங்கர்ராஜா போல பழைய ஆக்களிண்ட அந்தக்காலப்பாட்டுகளெண்டா காணும் அப்படியே கேட்டு ரசிச்சுக்கொண்டிருப்பா.அவவிண்ட பேரனுக்கும் அப்பிடித்தான்.கடைசியா செவ்வாயிற்கு போகேக்க.அவர் அங்க உந்த தனுஷ்,சிம்பு எண்டு அந்த பழையகாலத்து நடிகர்மாரிண்ட படங்களையெல்லாம் சேத்து வச்சு போட்டுபாத்துக்கொண்டிருக்கிறார்.
நாளைக்கு முழுதும் தலைக்கு மேல வேலை.இண்டைக்காவது கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பம்.
அப்பாடா………….
ரேடியாவில என்ன சொல்லுது.
“இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்.
செய்திகள்
முதலில் தலைப்புச்செய்திகள்
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படவேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு”
போதுமடா சாமி!
14 comments:
எழுதிக்கொள்வது: அல்வாசிட்டி.விஜய்
வாவ்!!! அருமையாக இருக்கிறது உங்கள் கற்பனை. ஆனால் கடைசியில்... :-( சீக்கிரம் தீர்வு வரட்டும். அமைதி நிலவட்டும்.
21.20 19.4.2005
அல்வாசிட்டி விஜய் அண்ணா அவர்களே உங்களது பின்னூட்டத்துக்கு நன்றி.
எழுதிக்கொள்வது: ஸ்ரீதர் சிவராமன்
அட ஆண்டவா இன்னுமா இலங்கை பிரச்சனை
தீரவில்லை...சரி சரி நான் திரும்பவும் செவ்வாய்கே போய்விடுகிறேன்.......
19.10 19.4.2005
எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்
எல்லா இடமும் இழுத்துக்கொண்டுபோயிட்டு கடைசியாய் அது.. அது.
நல்ல பதிவு.
நீங்க இதிலேயே மெகா சீரியல் ஒண்டு விட்டிருக்கலாம்.
23.40 19.4.2005
எழுதிக்கொள்வது: அருணன்
ஸ்ரீதர் சிவராமன் அண்ணா பின்னூட்டத்துக்கு நன்றி.அது சரி செவ்வாயுக்கு போனபிறகு தமிழ்மணத்தை மறந்திடாதேங்கோ.
தமிழ்வாணனின் பின்னூட்டத்துக்கும் நன்றி.எனது பதிவுகளும் உங்களது பின்னூட்டமும் அன்ரனாவும் பூஸ்டரும் மாதிரி.எப்பவே கூட இருக்கு.ஊக்கத்துக்கு நன்றி.நீங்கள் சொன்னமாதிரி கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.எழுதவே எனக்கு பொறுமையில்லை.வாசிக்க யாருக்கு பொறுமை இருக்கப்போகுது எண்ட பயத்திலதான் டிரெக்டா விஷயத்துக்கு வந்தனான்.
தொடர்ந்து வாசிக்கவும்.
23.53 19.4.2005
அதுசரி, இப்பவும் தமிழோ கதைக்கிறியள்?
எழுதிக்கொள்வது: அருணன்
தொடங்கீட்டாங்கடா சாமி!
என்னெண்டு வசந்தன் இப்பிடி பதிவு எழுதிக்கொண்டிருக்கிற மட்டும் தமிழை மறக்கிறது.
பயப்படாதேங்கோ செவ்வாய் போனாலும் சேரித்தமிழ் முதல் எதையும் மறக்கமாட்டம்.(இனி சுப்ரீம் ஜஜ்மெண்ட் வாங்கிக்கொண்டுதான் வலைத்தளத்துக்கு வரவேணும் போல கிடக்கு)
ம்........!
0.42 20.4.2005
உங்கள் நகைச்சுவையின் முடிவில் இழையோடும் சோகம் மனதைக் கிள்ளுகிறது. பிரச்சனை அரசியல்வாதிகளிடமா, போராளிகளிடமா அல்லது பிரச்சனை தான் என்ன? காலம்தான் பதில் சொல்லும் என்றும் சொல்ல இயலாது. நடப்பது நடக்கட்டும்.
எழுதிக்கொள்வது: அருணன்
அப்பிடிச்சொல்லாதேங்கோ சம்பத்குமார். இப்பிடி அந்தக்காலத்திலேயே அவரவரர் சொல்லிப்போட்டு போனதாலதான் பிரச்சினை இவ்வளவு தூரம் இழுபடுகிறது மட்டுமல்லாம துவக்குக்கு வேலையும் வந்தது.
நீஞ்களே யதார்த்தத்தை பாருங்கொ விஷயம் கொஞசம் வெளிக்கும்.வெளிநாடுகளுக்கே சுனாமிக்கு பிறகுதானே விறப்பு எடுபட்டிருக்குது.
நாரதர் சொன்ன மாதிரி கலகம் பிறந்தாத்தான் நியாயம் பிறக்கும்.
1.18 20.4.2005
அந்த மாதிரி அருணன். .. நான் நினைச்சன் அறிவியல் கதை எதாவது எழுத புறப்பட்டு விட்டியள் எண்டு.. கடைசியில..
அது சரி.. ஜனாதிபதியின் அறிக்கைக்கு எதிரா அரசாங்கத்திலேயே யாரும் அறிக்கை விடவில்லையா..?
எழுதிக்கொள்வது: அருணன்
இது சரியான கேள்வி சயந்தன்.கட்டயாம் விட்டிருப்பினம்.அதுக்குள்ள ஜே.வி.பி.ஆர்ப்பாட்டத்துக்கே ஒழுங்குபண்ணியிருக்கும்.
அது சரி அறிவியல் கதையள் எழுத வெளிக்கிட்டன் எண்டு எண்டடொரு சந்தேகம் உங்களுக்கு வந்ததா சொல்லியிருக்கிறியள்.சயந்தன் நக்கல் இருக்கலாம் நளினம் இருக்கக்கூடாது.
11.1 20.4.2005
எழுதிக்கொள்வது: தமிழ்வாணன்
பரிசோதனை
20.4.2005 அன்று 23.23 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
எழுதிக்கொள்வது: kavi
சூப்பர் அருணன். கொழுத்துங்க தொடர்ந்து.
21.4.2005 அன்று 1.46 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
எழுதிக்கொள்வது: Lingan
அநதக்காலத்தில இருந்து வேலையெண்டு ஓடிததிரியிறத இன்னும் விடேல்லையோ
21.4.2005 அன்று 9.15 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
Post a Comment