Wednesday, April 20, 2005

பக்கெற் படுத்தும் பாடு

வெளிநாடென்றாலே உங்கள் எல்லாருக்கும் தெரியும் இஞ்ச எங்கட கலாசாரம் பண்பாடு போல விஷயங்களை கொஞ்சம் அசந்தாலும் இன்னொரு உலகத்துக்குள்ள உள்வாங்கிப்போடுவாங்கள்;.அப்படிப்பட்ட ஒரு இயந்திர வாழக்கை வலை.

காலகாலமாக பேணி வாற எங்கட கலாசாரம் பண்பாடு என்ற பல விஷயங்கள் இஞ்ச இப்பவே எக்கச்சக்கமா மாறிப்போச்சு.இருக்கிற கொஞ்ச நஞ்சத்தையும் கட்டிக்காக்கிறது எண்டிறது டைனோசருக்கு கோமணம் கட்டிறது போல பெரிய வேலையாக்கிடக்கு.

உதாரணத்துக்கு சாப்பாட்டு விஷயத்தை எடுத்துக்கொண்டா எல்லாம் பக்கெற்றிலதான்.ஊரில கறந்த பால மாட்டை பாத்துக்கொண்டே குடிக்காலாம்.இஞ்ச பக்கெட்டில வாற பால் எங்கட கைக்கு வரேக்க சில நேரம் மாடே செத்துப்போயிருக்கும்.அதுபோலத்தான் எல்லாம்.

மசுக்குட்டி இருந்தாலும் பரவாயில்லை எண்டு எட்டி ரெண்டு பிடுங்கி குழம்பு வக்கிற முருங்கைக்காயையே இஞ்ச போத்திலுக்குள்ள அடைச்சுப்போட்டாங்கள் எண்டா பாருங்கோவன்.அது போல கன விளையாட்டுகள்.சாப்பிடேக்க அதுகளிண்டை உண்மையான ருசியே தெரியாது.

உந்த உல்டா விளையாட்டுகளுக்கு இஞ்ச பிரதான சாமானா பாவிக்கிறது பக்கெற்தான.வந்து பாத்தா தெரியும் எல்லாம் பக்கெற்.பாணும் பக்கெற் பாலும் பக்கெற் பாயும் பக்கெற் படுக்கிற தலையணையும் பக்கெற்.சந்தையில போய் எதையெடுத்தாலும் பக்கெற்.சரி ஏதோ சுகாதாரம்:காலநிலை மாறுபாட்டுக்குள்ள பாதுகாக்கிறது கஷ்டம் அது இது எண்டு சவட்டு மேனிக்கு போட்டுக்கட்டிறியள் எண்டுவிட்டா போன கிழமை வருஷப்பிறப்பண்டு எனக்கு கிடைச்ச அனுபவம் என்னை ஆகவும் உரு ஏத்தி விட்டுட்டுது.

தெரிஞ்ச ஆக்களிண்ட வீடு.அவயள் இஞ்ச கனகாலமா இருக்கினம். வருஷப்பிறப்பண்டு அங்க போனா ‘தம்பி வாங்கோ’ அது இது எண்டெல்லாம் கதைச்சுப்போட்டு.‘நல்ல நாளில வந்திருக்கிறியள் சாமியறைக்கு வாங்கோ கைவிசேஷம் தாறன்’ எண்டார் வீட்டுப்பெரியவர்.சரி போயாச்சு டொலரில வாறத ஏன் விடுவான் எண்டொரு வரட்டு நினைப்பபோட போனன்.

அங்க அந்தப்பெரியவர் கைவிசேஷத்தை கையில தர கண்ணில ஒற்றி கும்பிட்டுட்டு என்னடா ஏதோ புதுசாக்கிடக்கெண்டு பாத்தா,கைவிசேஷம் பக்கெட்டுக்குள்ள இருக்கு.

என்ன கோதாரியடா இது, எங்கட சமய முறைப்படி கைவிசேஷத்தை வெத்திலையில வச்சு மங்களகரமா குடுக்கிறதுதானே வழக்கம்.அதையே இஞ்ச எங்கட சனம் மாத்திப்போட்டுது எண்டதை நினைக்கத்தான் என்ன செய்யிறதெண்டு தெரியாம பெருமூச்சு வந்திச்சுது.

இவயளெ இப்பிடியெண்டா இனிவாற தலைமுறை இன்ரனெட்டில கிரடிட் கார்ட்டால கைவிசேஷத்தை குடுத்திட்டு போய்க்கொண்டே இருப்பினம் போலத்தான் கிடக்கு.

(குறிப்பு:தந்த கைவிசேஷக்காசு காணாது எண்ட வெறுப்பில இந்தப்பதிவை எழுதியிருக்கிறார் எண்டு யாரும் நினைக்கவேண்டாம் என்பது பணிவான வேண்கோள்)

6 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: சாந்தி ரமேஷ் வவுனின்

அட எங்களுக்குத்தான் உடனுக்குடன் சாப்பிட முடியாமல் பைக்கற் எண்டு நினைச்சா உங்கையும் அதுதானே.
இங்கு ஒவ்வொருவரும் தங்கள் சொந்தங்கள் சுகமக வாழவேணுமெண்டு கடன்பட்டு வட்டிகட்டி அனுப்புவதை எப்படியெல்லாம் கரைக்கிறாா்கள் என்பதை ஊருக்கு வந்த போது பாா்த்த போது எங்களைத்தன் நொந்து கொள்ள முடிந்தது.

இன்னும் அடுத்தவருக்காக கெளரவம் காட்டுவதும் அதற்கா பெற்ற பிள்ளையின் வருவாயைவே வாங்கி முழுங்கிவிட உங்கு நிறையப்போ் இருக்கின்ற போது பைக்கெட் மட்டுமில்லை இன்னும் பல வருகைகள் இருக்கிது.

வாழ்த்துக்கள்.

அன்புடன் சாந்தி

20.4.2005 அன்று 15.48 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Sayanthan

பனம்பழமே பக்கெற்றில் வருகிறது ஐயா..

21.4.2005 அன்று 7.41 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

அருணன்,

நல்ல பதிவு. நான் முதலில் படிக்கிறபோது 'பக்கெட்'( வாளி)ன்னு நினைத்துக் கொண்டேன். நம்முடைய பழக்க
வழக்கத்தை அனுசரிக்கமுடியாம (இந்த பக்கெட்
விஷயத்தை)இருக்கற கஷ்டத்தை ஒரு பதிவாப் போடணும்!

என்றும் அன்புடன்,
துளசி.

21.4.2005 அன்று 9.53 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Lingan

கைவிஷேஷக்காசு காணாது எண்ட வெறுப்பிலலை உங்களுககு. அது நல்லத் தெரியுது. உண்மையைச் சொல்லுஙகோ பக்கெற்றுககுள்ள காசு இருநததோ?

21.4.2005 அன்று 9.8 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: padmapriya

Hi Arunan,
I had read your essay on Pocket. Actually it will take few minits for me to understand that u r talking about Pockets and pacakages. I thought about bucket.

Then the points u had presented is very good. Yes I am also in the same openion.
But i cant understand ur cylonic tamil..but your writtings are good.

25.59.2005 அன்று 20.59 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.

Anonymous said...

//சரி போயாச்சு டொலரில வாறத ஏன் விடுவான் எண்டொரு வரட்டு நினைப்பபோட போனன்.//